| 245 |
: |
_ _ |a பவளவண்ணப்பெருமாள் கோயில் - |
| 246 |
: |
_ _ |a திருப்பவளவண்ணம் |
| 520 |
: |
_ _ |a எம்பெருமானின் நிறத்தைக்கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது ஒன்றுதான். எம்பெருமான் நான்குயுகங்களிலும்தான் கொண்ட 4 வர்ணங்களை இங்கு காட்டிக்கொள்வதாக ஐதீஹம். இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சைவண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. காலாண்டார் கோவிலில் பவள வண்ணரும் அதற்கெதிரில் அமைந்துள்ள பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் கோவிலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம். பச்சை வண்ணர் கோவிலை திருமங்கை மங்களாசாசனம் செய்யவில்லை. இருப்பினும் இங்கு வரும் பக்தர்கள் பவளவண்ணரைச் சேவித்துவிட்டு பச்சை வண்ணரையும் சேவித்துச் செல்வதையே மரபான கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார். இவர் பிரும்மரிஷிக்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம். இக்கோவில்கள் சென்னை ஸ்ரீ கரலபாடி ஆழ்வாரய்யா சாரீட்டீஸ் எனப்படும் அறக்கட்டளை நிர்வாகத்திற்குட்பட்டது. சுமார் நூறாண்டுகட்குமுன் வைணவ சம்பிரதாயத்தில் இருந்த கரலபாடி ஆழ்வாரய்யாவின் கனவில் தோன்றி பழுதுற்ற இத்தலங்களைப்புதுப்பிக்க எம்பெருமானே கட்டளை இட்டதாகவும் செய்தி. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். அச்வினி தேவதைகட்கும், பார்வதி தேவிக்கும் பெருமாள் காட்சி கொடுத்ததாக ஐதீஹம். பிள்ளைப் பெருமாளயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதியந்தாதியில் இதே வண்ணமயக்கை நிரல்படுத்தி இத்தலத்திற்குப் பாடல் இட்டுள்ளார். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், திருமங்கையாழ்வார், திவ்யதேசம், பெரிய காஞ்சி, காஞ்சிபுரம், பவளவண்ண பெருமாள், பச்சை வண்ண பெருமாள் கோயில், சென்னை ஸ்ரீகரலபாடி ஆழ்வாரய்யா சாரீட்டீஸ், மரகத வண்ணர், திருப்பவளவண்ணம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார்பாடல் பெற்ற திருப்பதி. |
| 914 |
: |
_ _ |a 12.8341735 |
| 915 |
: |
_ _ |a 79.7036402 |
| 916 |
: |
_ _ |a பவள வண்ணர் |
| 918 |
: |
_ _ |a பவள வல்லி |
| 923 |
: |
_ _ |a சக்ர தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார். |
| 930 |
: |
_ _ |a காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு சிறப்பாய் பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தேவி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்து ரத்தம் தோய நின்றார் பெருமாள். இவ்வாறு ரத்தம் தோய ப்ரவாளேசராக, ப்ரவாளேச வண்ணராக நின்றதால் ப்ரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார். |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் விமானம் ப்ரவாள விமானம் என்னும் கட்டிட வகையைக் கொண்டுள்ளது. |
| 933 |
: |
_ _ |a ஸ்ரீ கரலபாடி ஆழ்வாரய்யா சாரீட்டீஸ் |
| 934 |
: |
_ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், பச்சைவண்ணப் பெருமாள் கோயில் |
| 935 |
: |
_ _ |a இந்தப் பவளவண்ணர் கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள காலாண்டார் தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 பர்லாங் தொலைவு. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 938 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a காஞ்சிபுரம் நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000200 |
| barcode |
: |
TVA_TEM_000200 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000200/TVA_TEM_000200_திருப்பவளவண்ணம்_பவளவண்ணப்பெருமாள்-கோயில்-0003.jpg |
: |
|
| Primary File |
: |
cg103v071.mp4
TVA_TEM_000200/TVA_TEM_000200_திருப்பவளவண்ணம்_பவளவண்ணப்பெருமாள்-கோயில்-0001.jpg
TVA_TEM_000200/TVA_TEM_000200_திருப்பவளவண்ணம்_பவளவண்ணப்பெருமாள்-கோயில்-0002.jpg
TVA_TEM_000200/TVA_TEM_000200_திருப்பவளவண்ணம்_பவளவண்ணப்பெருமாள்-கோயில்-0003.jpg
TVA_TEM_000200/TVA_TEM_000200_திருப்பவளவண்ணம்_பவளவண்ணப்பெருமாள்-கோயில்-0004.jpg
TVA_TEM_000200/TVA_TEM_000200_திருப்பவளவண்ணம்_பவளவண்ணப்பெருமாள்-கோயில்-0005.jpg
TVA_TEM_000200/TVA_TEM_000200_திருப்பவளவண்ணம்_பவளவண்ணப்பெருமாள்-கோயில்-0006.jpg
|